முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 1 | ஓலமிட் டழுதோம் ஓடினோம் ஒடுங்கினோம்….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 1

தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

ஓலமிட் டழுதோம் ஓடினோம் ஒடுங்கினோம்….

ஓலமிட் டழுதோம் ஓடினோம் ஒடுங்கினோம்
ஒவ்வோ ரணுவாய்ச் சிதைந்தோம்!
காலத் தலைவன் காத்தெமைப் புரந்த
கனித்தமி ழீழத்தில் புதைந்தோம்!
ஞாலத் தெவரும் நாடினா ரில்லை
நாங்கள்ஏன் செத்து மடிந்தோம்!
மூலத் தாயக முள்ளி வாய்க்காலில்
முடைநாற் றத்திலே கிடந்தோம்!