முள்ளிவாய்க்காலில் படுகொலை-வலி.மேற்கு பிரதேச சபையில் அஞ்சலி

313 Views

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு வலி.மேற்கு பிரதேச சபையின் இன்றைய  அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, அரசியலுக்காகவும் ஊடகங்களில் பிரச்சாரப்படுத்துவதற்காகவுமே இவ்வாறான நினைவேந்தல்கள் இடம்பெறுவதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

படையினர் வீடுகளைக் கட்டிக் கொடுக்கிறார்கள். அதேபோன்று நினைவேந்தல் செய்யும் அரசியல்வாதிகளும் மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்க முன்வரவேண்டும் எனவும் மேற்படி கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

எதிர்ப்புத் தெரிவித்த கட்சி உறுப்பினர்கள் சிலர் மெழுகுதிரிகளை கையில் ஏந்தி நினைவேந்தலில் பங்கெடுத்திருக்கவில்லை. எனினும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு எதிராக ஏனைய உறுப்பினர்கள் காரசாரமாக கருத்துரைத்தனர்.

இறுதிவரை முள்ளிவாய்க்காலில் இருந்து அவலங்களைச் சந்தித்த உறுப்பினர்களான திருமதி சுபாஜினி, து.சுஜிந்தன் ஆகியோர் தாம் சுமந்த வலிகளை வெளிப்படுத்தி உரையாற்றியதுடன் அந்த மக்களுக்கான நினைவேந்தலை கொச்சைப்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply