முயலாமையும் இயலாமையும்

தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கூறுகின்றார் எங்கள் மக்களிடன்  ஒரு நல்ல பண்பு இருக்கின்றது அவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒன்றை உருவாக்குவார்கள் அதன் பின் ஒருவரை தலைவர் என்றும் அவரை சுற்றி ஒரு ஒளிவட்டம் போட்டு நீ தான் கடவுள் என்று சொல்லிவிட்டு அவரவர் தம் தம் வேலையை பார்க்க சென்று விடுவார்கள் என்று

praba முயலாமையும் இயலாமையும்அதுவே இன்றும் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின் உலகலாவிய ரீதியில்ப்  பரவிய எனமது விடுதலை புலி போராளிகளாக இருந்தாலும் சரி. புலம்பெயர் தமிழர்கள் ஆக இருந்தாலும் சரி. இன்னும் ஒன்றையும் முயலாமல் நாங்கள் எவரையோ தேடுகின்றோமே தவிர எங்களில் ஒருவர் முன்னுக்கு வந்தது கிடையாது

வன்றையும் முழுமையாகச் செய்ததும் கிடையாது அப்படி வந்தால் அதைச் செய்ய விடவும் மாட்டார்கள் அவர்களை எதிர்க்கும் ஆழுமையும் குடையாது.

பிட்டுக்காகாப் பரமேசன் மண்ணைச் சுமந்தான் இயேசு தத்துவத்தை காப்பாற்ற சிலுவை சுமந்த நாங்கள் எவரும் எதற்காகவும் எதையும் சுமக்க தயாராக இல்லை என்பது தான் இங்கே உண்மைமுயலாமையினால் அடங்கா ஆசைகளுடன் எழுந்த இயலாமையின் காரணமாக இன்றும் உலகளாவிய ரீதியில் எங்களுக்குள் போட்டி பொறாமையுடன் கூடிய பொய் சூது சூட்சிகள் பொண்டு சண்டைகள் செய்து கொண்டு ஒரு மைல் கல்லும் நகராது நிற்கின்றோம்.

எங்கள் மாவீரர் தியாகத்தால் எமது இலக்கை நோக்கிய பயனத்தில் ஆயிரம் ஆயிரம் மாவீர்ர்கள் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்து முன்னேறிய பாதை இன்று ஆயிரம் ஆயிரம் மைல் கற்கள் பின்ணோக்கி நிற்கின்றோம் ஒரு இலட்சியத்தால் ஒன்றுபட்டு அந்த இலக்கியத்துக்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்கள் பாதையில் நாங்கள் செல்லாது தனிப்பட்ட பிரச்சனையாகவும் தனிப்பட்ட விரோதங்களாகவும் வளர்த்து தனித்தனியே தெறித்துச் திக்கும் திசையாக தெரியாது சிதறி நிற்கின்றோம்.

நாங்கள் வணங்கும் எம்முள்ளே இருக்கும் மாவீர்ர்கள் சக்கி எம்மை வளிநடாத்தும் நாங்கள் உண்மையாணவர்களாக இருந்தால் எம் முள் இருக்கும் நான் என்னும் அகங்காரம் அழிந்தால் நீ சிறிதாகி உனக்கு நாடு பெரிதாகும் அப்போது உன் கண்கள். திறந்து அறவா வரம் கொண்ட பிரபாகரனயம் இரிள் போக்கி  தடை நீக்கி வளிகாட்டும். அவன் அருள் வேண்டும் அவனை வணங்க

கால வளிகாட்டி எங்கள் தலைவன்.

நாங்கள் அறிந்தவை  கை மண்ணளவு அறியாதவை உலகளவு அவன் ஒரு யுனிவெர்சிற்றி ( பல்கலைக் கழகம் ) அவனைப் பற்றிப் படித்துக்கொண்டே போகலாம்  நாங்கள் எத்தனை டிப்லோமாவும் செய்யலாம் அறியாமல் அறியாதவை அளவிட முடியாதவை அவன் ஒரு யுனிவேர்சம் (அண்டவெளி) அவனை உணர்ந்து படித்துப் பண்புடன் பின்பற்ற வேண்டும். அவன் சிந்தனை எங்களை இன்னும் ஆயிரம் ஆயிரம் வருடங்கள் வளிநடத்தும்…

வரன் ஜெர்மனி