முப்படையினருக்கும் அதிகாரமளிக்கும் வர்த்தமானியை புதுப்பித்தார் கோட்டா!

பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கு சிறப்பு வர்த்தமானியை சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். இதன்படி, இலங்கையின் நில, நீர்ப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பையும், அதிகாரத்தையும் முப்படையினருக்கு ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து மாதாந்தம் வெளியிடப்படும், இந்த வர்த்த
மானி அறிவித்தல், நேற்றுமுன்தினம் நள்ளிரவு மீளப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.