456 Views
வவுனியா கொறவப்பொத்தான வீதியில் ஏற்பட்ட விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளாகிய முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா கொறவப்பொத்தான வீதியில் திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா சொகுசு பேரூந்து மடுக்கந்தை மயிலங்குளம் வளைவு வீதியால் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியை பின்புறமாக மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்துச் சம்பவத்தில் வயோதிபர் பலத்த காயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு விபத்துப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.