மிலேனியம் சலஞ் உடன்பாட்டை சிறீலங்கா ஏற்கவேண்டும் – அமெரிக்கா காங்கிரஸ் சபை

மிலேனியம் சலஞ் உடன்பாடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் அமெரிக்காவின் காங்கிரஸ் சபை உறுதியாக உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.

இந்த வாரம் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் மத்திய மற்றும் தென்னாசியப் பிராந்தியத்திற்கான செயலாளர் அலிஸ் வெல்ஸ் இதனை உறுதிப்படுத்தியதுடன், அவரின் சிறீலங்கா பயணத்தின் நோக்கத்தை வெற்றிபெறச் செய்யும் வகையில் சிறீலங்காவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக்கும் சிறீலங்காவுக்கு கடந்த வாரம் வருகை தந்திருந்தார்.

சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சா ஆகியோரை சந்தித்த பிளேக் அமெரிக்காவின் உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான அழுத்தங்களை மேற்கொண்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் உத்தரவிற்கு அமைவாகவே பிளேக் சிறீலங்காவுக்கு இரகசியமாக வந்திருந்தார்.

Leave a Reply