மியான்மர் இராணுவ ஆட்சியோடு அரசு உறவாடக் கூடாது – மட்டக்களப்பில் போராட்டம்

மியான்மர் இராணுவ ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் எனவும் மியான்மரில் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும் கோரி போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வடக்கு கிழக்க ஒருங்கிணைப்புக் குழவின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பொது அமைப்புகள், ஒன்றிணைந்து இந்த கவனயீர்பு போராட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

இக் கவனயீர்பு ஆர்பாட்டத்தில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சிவில் அமைப்புகள், போரினால் பாதிக்கப்பட்ட சமூகப்பிரிவினர், பெண்கள் அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொதுமக்கள், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அதிகாரி ஆகியோருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.