மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளியில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட இருந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு இலங்கை காவல்துறையினரால் இடைநிறுத்தம்.
நிகழ்வு தொடர்பான பதாதைகள் அகற்றப்பட்டு பொலிஸ் விசாரணை என்ற பெயரில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் இலங்கை காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு 14 தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.