மாவீரர் நினைவேந்தல் தடை – மீண்டும் வழக்கு தாக்கல் செய்யும் பொலிஸார்

497 Views

பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் மீளவும் விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன.

இன்று முற்பகல் தாக்கல் செய்யப்பட்ட இந்த விண்ணப்பங்கள் பிற்பகல் மன்றில் அழைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விண்ணப்பங்கள் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பிரதிவாதிகளாக முன்னர் தாக்கல் செய்யப்பட்டு மீளப்பெறப்பட்ட விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை, முன்னதாக 3 விண்ணப்பங்கள் கடந்த வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மீளப்பெறப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply