நவம்பர் மாதம் என்பது தமிழ் மக்களின் வரலாற்றில் விடுதலைக்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகொள்ளும் மாதமாகும்.
தமிழ் மக்களின் இனவிடுதலை கோட்பாடுகளை அழிக்கும் நோக்கத்துடன் இலங்கை அரசு மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்தபோதும்இ அழிக்கப்பட்ட இடங்களை துப்பரவு செய்து அதில் விளக்கேற்றி வணங்கி அஞ்சலி செலுத்துவதை தமிழ் மக்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருவது வழக்கம்.
இந்தவருடமும் அதற்கான பணிகளை தாயகத்தில் உள்ள அரசியல் கட்சிளும், தமிழ் மக்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை(2) வன்னிவிளாங்குளம் கொடிகாமம், தரவை போன்ற இடங்களில் உள்ள மாவீரர் துயிலும் முதல்கட்ட சிரமதானப்பணி ஆரம்பமாகியுள்ளது. இதில் பொதுமக்களும், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் இணைந்து பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
அதேசமயம், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களும் மாவீரர் தினத்தை நினைவுகூரும் முகமாக ஏற்பாடுகளை உலகம் எங்கும் செய்துவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.