மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு

யாழ். நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகில் நல்லூர் பகுதியில் உள்ள மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று மக்களின் அஞ்சலிக்காக இன்று மாலை 6 மணிமுதல் நாளை(27) வரை வைக்கப்படவுள்ளது.

விடுதலைப் புலிகளின் முதல் மாவீரர் தொடக்கம் இறுதி யுத்தத்தில் வீரமரணமடைந்தவர்கள் உள்ளிட்ட 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது

மாவீரர் வாரத்தின் இறுதி நாளான 27ஆம் திகதி மாலை 6.05இற்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று, சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Nallur3 மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுnallur மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு