மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தப்பட்டது

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தப்பட்டது.

அண்மையில் சட்டத்தரணி சுவஸ்திகா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என தெரிவித்திருந்தார்.இன்றைய தினம்(31.10.2023) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டதுஇந்தநிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடுமையான எதிர்ப்பினையடுத்து குறித்த கருத்தரங்கு நிறுத்தப்பட்டது.இவரது கருத்திற்கு பல்வேறு தரப்புகளும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.