மலையக மக்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் ஓவியக் காட்சி

விம்பம் (லண்டன்) ஏற்பாட்டில் நேற்று தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் மலையக மக்களின் வாழ்வையும் அடையாளத்தையும் வெளிப்படுத்தும் ஓவியக் காட்சி நடந்தது.

மலையகம் 200 ஐ முன்னிட்டு நடத்தப்பட்ட சிறுகதை, ஓவியப்போட்டிகளில் பரிசு பெற்ற அறிவிப்பைக் கொண்ட நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலில் B.A.காதர், மல்லியப்பு திலகர், கருணாகரன், கரவைதாசன் ஆகியோரின் கட்டுரைகள் உள்ளன.

தொடர்ந்து சில நாட்களுக்குபருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் ஓவியக் காட்சியும் நூல் அறிமுகமும் நடக்கவுள்ளது.