மரணவீட்டை தேர்தல் பிரச்சாரமாக்கியதாக குற்றச்சாட்டு

கடந்த செவ்வாய்க்கிழமை மரணமடைந்த இலங்கை தொழிலாளர் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மரணச்சடங்கை அவரின் மகன் ஜீவன் தொண்டமான் தேர்தல் பிரச்சார மேடையாக பயன்படுத்துவதாக சிறீலங்கா தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

ஆறுமுகனின் பிரேதப் பெட்டியை திறந்த வாகனம் ஒன்றில் வைத்து மலையகத்தில் உள்ள தோட்டங்களில் ஊர்வலமாக ஜீவன் எடுத்துச் சென்றுள்ளார். தேர்தல் பிற்போடப்பட்டபோதும் இது விதிமுறை மீறல் என சிறீலங்கா தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையத்தின் செயலாளர் மஞ்சுளா கஜநாயகே தெரிவித்துள்ளார்.

இது தற்போதைய கொரோனா நெருக்கடி நிலமையின் சுகாதார விதிகளையும் மீறும் செயலாகும். இதற்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவும், சிறீலங்கா காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்காதது வருத்தம் தருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.