மன்னாரில் 50 கோடிக்கு மேற்பட்ட செலவில் உயர் தொழில்நுட்பவியல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது

207 Views

மன்னாரில் 50 கோடிக்கு மேற்பட்ட செலவில் உயர் தொழில்நுட்பவியல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

உலகவங்கியின் நிதி அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் 50 கோடிக்கும் மேற்பட்ட ரூபாய் செலவில் புதிய உயர்  தொழிநுட்பவியல்  கட்டிடத்திற்கான அடிக்கல் இன்றைய தினம் (22) வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் நாட்டி வைககப்பட்டது

2017 ம் ஆண்டில் மன்னார் மாவட்டத்தில்  உயர் தொழிநுட்பவியல் கட்டிடம் ஒன்று நிறுவப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வந்தமைக்கு அமைவாக இன்றைய தினம் மன்னார் உயிலங்குளம் பகுதியில் உயர் தொழிநுட்பவியல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

IMG 20210622 WA0004 மன்னாரில் 50 கோடிக்கு மேற்பட்ட செலவில் உயர் தொழில்நுட்பவியல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது

இதேவேளை இந்த கட்டிடம் அமைவதற்கான 5 ஏக்கர் நிலப்பரப்பையும் உயிலங்குளம் பகுதியில் சாள்ஸ் நிர்மலநாதன் பெற்றுக் கொடுத்துள்ளார். இந்த நிறுவனத்தின் கல்வி இணைப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மதத் தலைவர்கள்  மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மெல் மன்னார் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

மன்னார் மாவட்டத்தின் எதிர்கால கல்வி வளர்ச்சியின் நன்மைக்காக இந்த உயர் தேசிய கல்வி நிறுவகம் மன்னாரில் நிறுவப்படுவதை மன்னார் கல்வி சமூகத்தினரிடம்  வரவேற்று நிற்பதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களுக்கு மன்னார் கல்வி சமூகத்தினர் நன்றிகளைத்  தெரிவிக்கின்றார்கள்.

Leave a Reply