மன்னாரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம்

மன்னாரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். மன்னாரிலிருந்து படகில் சென்று தனுஸ்கோடியின் முதலாவது தீடையில் தரையிறங்கிய அகதிகளை அவதானித்த தமிழக மீனவர்கள், தமிழகக் கரையோரக் காவல்படையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்தத் தகவலின் அடிப்படையில் கடலுக்குச் சென்ற கரையோரக் காவல் படையினர் நால்வரையும் மீட்டு தனுஷ்கோடியில் வைத்து இராமேஸ்வரம் மரையன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் மண்டபம் அகதி முகாமில் ஒப்படைக்க நடவடிக்கை
எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அகதிகளாகச் சென்றவர்கள் மன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.