மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்படாது: கோட்டாபய உறுதி

411 Views

மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்படாது என்று சிறீலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுச் செய்தியாளர்களை நேற்று முன்தினம் ஜனாதிபதி சந்தித்தபோது, மத்தள விமான நிலையம் இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், மத்தள விமான நிலையம், நாட்டின் மாற்று அனைத்துலக விமான நிலையமாக சிறீலங்கா விமான நிலைய அதிகார சபையினால் அபிவிருத்தி செய்யப்படும். இந்தத் திட்டம் குறித்து இந்தியாவுடன் எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.

அதேவேளை, இந்திய நிறுவனங்கள் குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்வதை வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply