மட்டக்களப்பு விபத்து –பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை கைது

மட்டக்களப்பில் விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையின் ஆசிரியை ஒருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளர்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் இன்று(03) காலை வீதியில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையின் ஆசிரியை ஊறணி பகுதியில் உறவினர் வீட்டிலிருந்து ஆரையம்பதியிலுள்ள தனது வீடு நோக்கி காரில் சென்ற வேளையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொக்கட்டிச்சோலை செல்வதற்கு மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் பஸ்ஸ{க்காக காத்திருந்த வேளையில் வேக கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியில் நின்றிருந்தவர்கள் மீது மோதியுள்ளது.இதன்போது 72 வயதுடைய வீரசிங்கம் என்பவர் உயிரிழந்துள்ளார். இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த பவளக்கொடி (65) யோகேஸ்வரி (57) ஆகிய இருவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

IMG 20200103 WA0007 மட்டக்களப்பு விபத்து –பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை கைது

ஆசிரியை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.