மட்டக்களப்பு: தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட கஜேந்திரனிற்கு அனுமதி மறுப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸிற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

“மே 19 நினைவேந்தலை முன்னெடுத்தமைக்காக பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் இங்கே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.  புகைப்படங்களை பயன்படுத்தியமைக்காக கைதுசெய்யப்பட்டவர்களும் இங்கே உள்ளனர்.

192314552 135611691969492 7356479402849218714 n மட்டக்களப்பு: தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட கஜேந்திரனிற்கு அனுமதி மறுப்பு

இந்த குடும்பங்கள் மத்தியிலேயே இவர்கள் தொடர்பில் ஆழமான கவலை காணப்படுகின்றது ,அவர்கள் போதிய கோவிட் பாதுகாப்பு இல்லாமல், நெருக்கமான இடங்களிலே, தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் மத்தியில் அச்சம் பரவியுள்ளது.

இன்றைய தினம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வருகை தந்து இங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம் ஆனால் தற்போதுள்ள கோவிட் சூழல்காரணமாக கைதிகளை பார்வையிட முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.