கிறிஸ்மஸ் தினத்தினை முன்னிட்டு தேவாலயங்களில் பிரார்த்தனைகள் நடைபெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் போதையொழிப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்வாக நடாத்தப்பட்டது.
ஜேசு கிறிஸ்து மனிதர்கள் மத்தியில் உள்ள கெட்ட குணங்களை அவதரித்த நிலையில் மனிதர்களை நேற்று ஆட்கொண்டுள்ள போதைப்பொருள் பாவனையை இல்லாது ஒழிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு சின்னஊறணியில் உள்ள கிராம துவிஷேச சபையின் ஏற்பாட்டில் நேற்று காலை போதையொழிப்பு விழிப்புணர்வு பேரணியும் விழிப்புணர்வு நாடகமும் நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு சின்னஊறணியில் உள்ள கிராம துவிஷேச சபையின் ஆலயத்தின் இருந்து ஊர்வலமாக வந்து மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகளுக்கும் ஊர்வலமாக சென்று போதைபொருள் பாவனையின் தாக்கம் அதனால் ஏற்படும் சமூக பின்னடைவுகள் குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
ஜேசு பிரானின் நோக்கமான மனிதர்கள் மத்தியில் காணப்படும் துர்குணங்களில் ஒன்றான போதைப்பொருள் பாவனையினை ஒழிக்கும் வகையிலான பல்வேறு சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தியவாறு மட்டக்களப்பு சின்னஊறணியில் உள்ள கிராம துவிஷேச சபையின் தலைவர் க.தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் கலந்துகொண்டனர்.
இதன்போது போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் தீமைகள் மற்றும் அவற்றினை தடுக்கும் வகையிலான வீதி நாடகங்களும் நடாத்தப்பட்டது.