மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்பு – நான்கு இலட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

420 Views

இலங்கை சோசலிச குடியரசின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்புக்கான வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்கு சீட்டுகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு கொண்டுசெல்லும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகளுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்கு சீட்டுகளை கொண்டு செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளிலும் மொத்தமாக 3 இலட்சத்து 98 ஆயிரத்து 301 (3,98,301) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதில் கல்குடா தேர்தல் தொகுதியில் 1,15,974 பேரும்,மட்டக்களப்பு தேர்தல்
தொகுதியில் 1,87,672 பேரும் ,பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 94,648 பேரும்
வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.இவர்கள் வாக்களிக்க 428 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு கடமைகளுக்காக 1688 பொலீஸ் உத்தியோகத்தர்கள், 320 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இணைப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்களும் கணக்கெடுப்பு நிலையங்களுக்காக பாதுகாப்பு கடமைக்கு இரண்டு
பொலீஸ் உத்தியோகத்தர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.இதனை தவிர ரோந்துப்பணியில் விசேட பொலீஸ் பிரிவினர் பங்கேடுக்கவுள்ளனர்.

Batti elec மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்பு - நான்கு இலட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.வாக்குப்பெட்டிகள் கையளிப்பதற்கு என 54 உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் கடமைக்கு இணைக்கப்பட்டுள்ளதுடன்.அதனை தவிர வலயங்களுக்கு பொறுப்பான உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களும் கடமைகளை பொறுப்பேற்றனர்.

தேர்தல் பணியினை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு குழுவின் சர்வதேச உள்நாட்டு கண்காணிப்பாளரின் தங்களது கண்காணிப்பு பணியினை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply