மட்டக்களப்பில் கொரோனாவால் இது வரையில் 57 பேர் பலி

202 Views

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 3935பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் 57பேர் மரணமடைந்துள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதா சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

மேலும் மூன்றாவது அலை காரணமாக 2952பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 48பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த ஏழு தினங்களில் 693கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 06தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் 19959பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுவதாக கூறிய அவர்,பயணத்தடை அமுலில் உள்ளபோதிலும் மக்களின் நடமாட்டம் மிகவும் அதிகளவிலேயே காணப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்  கோவிட் தொற்றினை,  பயணக்கட்டுப்பாட்னை பயன்படுத்தி வீட்டில் இருப்பதன் மூலமே குறைக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply