மட்டக்களப்பில் கன மழை- தாழ்ந்த பகுதிகளில் வெள்ள அபாயம்

414 Views

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழைபெய்து வருகின்றது.

இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

IMG 0525 மட்டக்களப்பில் கன மழை- தாழ்ந்த பகுதிகளில் வெள்ள அபாயம்

மழை காரமான பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் தாழ்நிலங்களில் உள்ள வீடுகளும் நீரில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.

கடும் வறட்சிக்கு பின்னர் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கும் அதேநேரம் சில தாழ்நிலங்களில் உள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

IMG 0490 மட்டக்களப்பில் கன மழை- தாழ்ந்த பகுதிகளில் வெள்ள அபாயம்

கொரோனா அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply