கொரோனா தொற்றுக்குள்ளாகும் நோயாளர்களை தங்க வைப்பதற்காக இரவு, பகலாக வவுனியா இளைஞர்கள் முன்மாதிரியாக செயற்பட்டு வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கமானது வேகமாக அதிகரித்து வரும் நிலையில், வவுனியா மாவட்டத்திலும் கொரோனா வைத்தியசாலைகளை நிறுவ அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தேவையான கட்டில்களை இளைஞர்கள் முன்வந்து வடிவமைத்து வருகின்றனர்.
வவுனியா மாவட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதனுடன் இணைந்து செயற்படும் இளைஞர்கள், இரவு பகலாக இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் 40 கட்டில்களை பிரதேச சம்மேளன இளைஞர்கள் மூலமாக வடிவமைத்து வருகின்றனர். இரும்பிலான கட்டில்களாக அதனை வடிவமைத்து வருகின்றனர்.
அதே போல், மன்னார் மாவட்ட இளைஞர்களும் தமக்கு வழங்கப்பட்டுள்ள உன்னத பணியை மிகவும் திறம்பட ஆற்றில் வருகின்றனர்.
மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட காரியத்தின் ஊடாக மாவட்டங்களில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பிரதேச சம்மேளனங்கள் ஊடாக கொரோனா நோயாளர்களை பராமரிப்பதற்கான தலா 10 கட்டில்கள் உருவாக்கும் பணி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.