மக்களின் கடும் எதிா்ப்பின் மத்தியில் சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு வேலைகள் ஆரம்பம்

IMG 20240611 WA0014 மக்களின் கடும் எதிா்ப்பின் மத்தியில் சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு வேலைகள் ஆரம்பம்திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு சனிக்கிழமை (08) பாறை உடைப்பு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் உடைப்பு வேலைகள் நிறுத்தப்பட்டன.

IMG 20240611 WA0015 மக்களின் கடும் எதிா்ப்பின் மத்தியில் சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு வேலைகள் ஆரம்பம்ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிக்கு (11) மீண்டும் மலை உடைப்பு வேலைகளை ஆரம்பித்த போது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் பாறை உடைப்பு இயந்திரம் வேலைகளை ஆரம்பித்த போது அப்பகுதிக்கு அப்பகுதி மக்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று எதிர்ப்பை வெளியீட்டு தடுத்து நிறுத்தினர்.

IMG 20240611 WA0017 மக்களின் கடும் எதிா்ப்பின் மத்தியில் சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு வேலைகள் ஆரம்பம்இவ் விடயத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் அரசியல் வாதிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.