இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அரசியலில் நுழைய தயாராவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவன் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மூலமே அவர் தனது அரசியல் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும், ஆறுமுகம் தொண்டமானுக்கு சவால் விடும் வகையில் முரளிதரன் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தைத் தெரிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பில் அவர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உயர் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக முத்தையா முரளிதரன் தெரிவிக்கையில், இணையத்தில் பரவும் குறிப்பிட்ட செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என குறிப்பிட்டார்.
அதேவேளை தான் ஒருபோதும் அரசியலில் களம் இறங்குவதாக தெரிவிக்கவே இல்லையெனவும் குறிப்பிட்டார்.
எனக்கு ஒருபோதும் அரசியலில் குதிக்கும் எண்ணம் இல்லை. எனவே நான் அரசியலில் களம் இறங்குவதாக வெளியாகியுள்ள பொய்யான செய்தியை தயவு செய்து யாரும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என ரசிகர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.