மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள பூஜிதவுக்கு அனுமதி மறுப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் புதல்வரின் திருமண நிகழ்வுக்குச் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லையயனத் தெரிவிக்கப்படுகின்றது.

அவருடைய மகனின் திருமண வைபவம் நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. அதன் சாட்சியாளராகவும் அவர் கையயாப்பமிட ஏற்பாடாகியிருந்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு விளக்கமறியலில் இருக்கும் பொலிஸ் மா அதிபர் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் அனுமதி கோரியிருந்துள்ளார்.

எந்தவொரு சந்தேகநபருக்கும், சிறைக் கைதிக்கும் தமது பெற்றோரின் மரணச் சடங்குகள் தவிர்ந்த வேறு எந்த நிகழ்விலும் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்க சிறைச்சாலைகள் சட்டத்தில் இடமில்லையயனச் சிறைச்சாலைகள் ஆணையாளர் பந்துலஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் கொலை உட்பட பல குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார் என்பது தெரிந்ததே.