போர் நிறுத்தமும் கைதிகள் பரிமாற்றமும் எதனால் ஏற்பட்டது? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இஸ்ரேல் விரும்பாத போர் நிறுதத்திற்கும், கைதிகள் பரிமாற்றத்திற்கும் இஸ்ரேலையும், அமெரிக்காவையும் கொண்டு சென்ற காரணிகள் என்ன என்பதே தற்போது பேசு பொருளாக உள்ளது.

istre hostage போர் நிறுத்தமும் கைதிகள் பரிமாற்றமும் எதனால் ஏற்பட்டது? - வேல்ஸ் இல் இருந்து அருஸ்முதலாவது காரணியாக படைத்துறை மற்றும் பொருளாதார ரீதியில் இஸ்ரேல் சந்தித்துவரும் இழப்புக்கள் ஒருபுறம் இருக்க பிணைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி அவர்களின் உறவினர்கள் இஸ்ரேல் அரசின் மீது மேற்கொண்டுவரும் அழுத்தங்களும் அதிகம்.

கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் நாள் ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் போதும் பின்னர் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்களினாலும் இஸ்ரேல் பொருளாதார மற்றும் படைத்துறை ரீதியாக சந்தித்துவரும் இழப்புக்கள் மிக மிக அதிகம். இந்தபோர் மேலும் நீடித்தால் இஸ்ரேல் வீழ்ச்சிகண்ட நாடாக மாற்றம் பெறும் என்பதையும் இப்போது அவர்கள் உணரத்தலைப்பட்டுள்ளனர்.

போருக்கான செலவுகள் உள்ளடங்கலாக இஸ்ரேலின் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை 400 விகிதம் அதிகரித்துள்ளது. இஸ்ரேலின் நாணயமாக செகெல் நாணயம் 15 விகிதம் வீழச்சி கண்டுள்ளது. கடந்த 8 வருடங்களில் மிக மோசமான வீழ்ச்சி இது. முக்கியமான 5 வங்கிகளின் பங்குகளும் 20 விகித வீழ்ச்சியை கடந்த இரண்டு மாதங்களில் சந்தித்துள்ளது. அல் அக்ஷ புளொட் எனப்படும் படை நடவடிக்கையை தொடர்ந்து 350,000 இஸ்ரேல் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் ஒரு மில்லியன் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

Istr lost2 போர் நிறுத்தமும் கைதிகள் பரிமாற்றமும் எதனால் ஏற்பட்டது? - வேல்ஸ் இல் இருந்து அருஸ்இஸ்ரேலுக்கு ஆதரவான நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சியை கண்டுள்ளன. அதில் பெப்சி, மக்டொனால்ட், ஸ்ரார்பக் என்பனவும் அடங்கியுள்ளன. படைத்துறை ரீதியாக 195 படைத்துறை வாகனங்கள் பகுதியாக அல்லது முற்றாக அழிவடைந்துள்ளன. 22 வாகனங்கள் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. படைத்துறை வாகனங்கள், டாங்கிகள், கவசவாகனங்கள், துரப்புக்காவி வாகனங்கள் என 1000 இற்கு மேற்பட்ட படைத்துறை சொத்துக்கள் அழிவடைந்துள்ளன.

தினமும் 250 மில்லியன் டொலர்கள் போருக்கு செலவாகின்றது. அதாவது 1 பில்லியன் செகீல். காமாஸின் ஏவுகணை ஒன்றை தடுத்து வீழ்த்துவதற்கு 20,000 டொலர்கள்  தொடக்கம் 100,000 டொலர்கள் செலவாகின்றது. ஆயுதங்களுக்கு செலவிட்ட தொகை 18 பில்லியன் டொலர்கள் இது இஸ்ரேலின் மொத்த உற்பத்தியில் 3.5 விகிதம். இலங்கையின் மொத்த உற்பத்தியில் 25 விகிதம்.

250 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். 1538 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 5431 காயமடைந்துள்ளனர். 750 பேர் காணாமல் போயுள்ளனர். படைத்துறை ரீதியாக 391 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் அதன் எண்ணிக்கை கடந்த மாதத்தின் நடுப்பகுதி வரையிலும் 73 அதிகாரிகள் உடப்ட 1000 இற்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் 2895 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டதுடன், 11000 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

வியாபார நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 76,4000 மக்கள் வேலைகளை இழந்துள்ளனர். 300,000 பேர் இராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது பாணியாளர்களின் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 50,000 வெளிநாட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். 10 இற்கு மேற்பட்ட நாடுகள் தமது தூதுவர்களை மீள அழைத்துள்ளது. தொன்னாபிரிக்கா நாடாளுமன்றம் இஸ்ரேலின் தூதரகத்தை மூடுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை தடைசெய்யுமாறு உலக நாடுகளுக்கு சவுதிஅரேபியா கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 73 விகிதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. அடுத்த 6 மாதங்கள் போர் நீடித்தால் சுற்றுலாப்பயணத்துறை முற்றாக முடங்கிபோகும் நிலை ஏற்படலாம். இஸ்ரேலின் மிக முக்கிய ரமார் எரிவாயு உற்பத்தி நிலையம் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. பல முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் கடல் வர்த்தகத்தை முடக்கும் ஏமனின் நடவடிக்கையும் புதிய நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளது. பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான கடல் வர்த்தகம் பாதிக்கப்படலாம்.

cost2 போர் நிறுத்தமும் கைதிகள் பரிமாற்றமும் எதனால் ஏற்பட்டது? - வேல்ஸ் இல் இருந்து அருஸ்இவை பொருளாதார இழப்பீட்டின் ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தான். அரைவாசிக்கு மேற்பட்ட இழப்புக்களை ஊடகங்கள் இன்னும் வெளிக்கொண்டுவரவில்லை. போர் தொடர்ந்தால் இந்த இலக்கங்கள் மேலும் அதிகரிக்கும். போர் முடிந்தாலும் உடனடியாக இஸ்ரேலின் பொருளாதாரம் மீளவதற்கு வாய்ப்பில்லை என்கின்றது ஒரு ஆய்வு.

இஸ்ரேல் ஹிஸ்புல்லாக்களை போருக்கு தூண்டுவதாகவும், அதனை தவிர்ப்பதற்காக பைடனின் ஆலோசகர் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாகவும், அதே சமயம், அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் பிளிங்டன் அடுத்த வாரம் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அகிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் 1000 படகுகளில் காசாவுக்கு செல்லப்போவதாக துருக்கி அறிவித்துள்ளது. அதாவது அதிகரித்துவரும் படைத்துறை, பொருளாதார மற்றும் இராஜதந்திர அழுத்தங்கள் தற்போதைய போர் நிறுத்திற்கும், கைதிகள் பரிமாற்றத்திற்கும் இஸ்ரேலை இணங்க வைத்துள்ளது.