போரில் பல இழப்புக்களை சந்தித்த பெரிய பண்டிவிரிச்சதன் கிராம இளைஞனின் சாதனை.

வசதிபடைத்த நகர்புற இளைஞர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்கள் பின்தங்கிய கிராமப்புறங்களில் வாழும் இளைஞர்களுக்கு எட்டாக் கணியாகவே காணப்பட்டு வருகிந்தது இவற்றை தகர்க்கும் முறையில் மன்னாரைச் சேர்ந்த எஸ்.ஜெ.வோல்டிசொய்ஸ்சா முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக (ADP) 29 வயதில் பொறுப்பேற்க உள்ளார்.

இவர் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தில் படித்து, கடந்த கால யுத்தத்தில் பல இன்னல்களை சந்தித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி பல்கலைக்கழக படிப்பை சிறப்புற முடித்திருந்தார்.

அதன் பின்னர் தனது கடின முயற்சியினால் முகாமைத்துவ உதவியாளராக (ஆயு) பணியாற்றி, பின்பு தனது திறமையினால் சமூக சேவை உத்தியோகத்தராக மன்னார் மடு பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வந்தார். அதனைத் தொடர்ந்து தனது முயற்சியினாலும் திறமையினாலும் இலங்கை திட்டமிடல் சேவை பரீட்சையில் (SLPS) சித்தியடைந்து, நாளைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக (ADP) பொறுப்பேற்க உள்ளார்.

குடும்ப வறுமைக்கு மத்தியிலும் பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தில் உள்ள பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்தில் படித்து கல்வி ரீதியான பதவிகளில் உயரிய பதவியொன்று வகிக்கும் முதல் நபர் என்ற பெயரை எடுத்து இந்த ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார் என அவ்வூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இலை மறை காயக இருக்கும் இளைஞர்கள் கல்வியை ஆயுதமாக எடுத்து அரசியலிலும் அரச உயர் பதவிகளிலும் பிரசன்னமாகி தமிழ் மக்களின் உரிமைகளை வெண்றெடுப்பதற்கு போராட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்