பொது சுகாதார பரிசோதகர் சுட்டுக் கொலை – இன்று காலை சம்பவம்

எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பொதுச் சுகாதார பரிசோதகரே எனத் தெரிவிக்கப்படுகிறது.

எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையில் உள்ள அவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.