பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் போராட்டத்தை குக்கிராமத்தில் இருந்து தொடங்குங்கள் : கத்தலோனியா பிரதிநிதி கருத்து !

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு, பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் போராட்டத்தை கீழ் இருந்து மேலாக, குக்கிராமங்களில் இருந்து தொடங்குங்கள் என கத்தலோனியா பிரதிநிதி யோடி விலனோவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சுவிசில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் கலந்து கொண்டு உiராயற்றும் பொழுதே இக்கருத்தினை அவர் வெளியிட்டிருந்ததோடு, கத்தலோனியாவின் பொதுவாக்கெடுப்புக்கான அரசியல் போராட்டம் எவ்வாறு கட்டியெழுப்பபட்டது என்ற தங்களது அனுபவத்தினை பகிர்து கொண்டிருந்தார்.

2 பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் போராட்டத்தை குக்கிராமத்தில் இருந்து தொடங்குங்கள் : கத்தலோனியா பிரதிநிதி கருத்து !

மேலும் அவர் தெரிவிக்கையில், ஸ்பெயின் மைய அரசின் கட்டமைப்பு, அதன் சட்டங்களை கடந்து கத்தலோனிய மக்கள் தமது சுதந்திரத்துக்கான அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்தும் வகையில், மக்களாகவே குக்கிராமங்கள் தோறும், மக்கள் வாக்குப்பெட்டி என்ற பொறிமுறையினைத் தொடங்கப்பட்டது. அது மிகப் பெரும் அசைவியக்கமாக அரசியல் இயக்கமாக எழுச்சிகொண்டு, கத்தலோனியா தேசமே, தனது அரசியல் விருப்பினை பொதுவாக்கெடுப்பும் மூலம் வெளிப்படுத்தியது

ஆனால் ஸ்பெயின் மைய ஜனநாயக நீரோட்டம் போல், சிறிலங்காவின் ஜனநாயகம் இல்லை. இனநாயகப்படுத்தப்பட்ட சிறிலங்காவின் அரசியல் வெளியில் கிடைக்கின்ற வாய்ப்புக்களை, பொதுவாக்கெடுப்பினை நோக்கிய மக்கள் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி, அகலப்படுத்த வேண்டும்.

3 பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் போராட்டத்தை குக்கிராமத்தில் இருந்து தொடங்குங்கள் : கத்தலோனியா பிரதிநிதி கருத்து !

பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் போராட்டத்தினை கீழ் இருத்து மேலாக கட்டியெழுப்ப வேண்டும் என கத்தலோனிய தேசத்தின் பொதுவாக்கெடுப்புக்கான போராட்டத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

1 பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் போராட்டத்தை குக்கிராமத்தில் இருந்து தொடங்குங்கள் : கத்தலோனியா பிரதிநிதி கருத்து !