பொதுநலவாய அமைப்பிலிருந்து விலக வேண்டும்: ஒமல்பே சோபித தேரர்

புலம்பெயர் தமிழர்களுக்கு கூஜா தூக்கும் பொது நலவாய அமைப்பிலிருந்து இலங்கை உடனடியாக விலகவேண்டும் என எம்பிலிப்பிட்டிய ஓமல்பே சோபித தேரர் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

“இங்கிலாந்து பிரதமராக மீண்டும் வெற்றி பெற்ற பொறிஸ் ஜோன்சன் தனது தேர்தல் வெற்றியின் பின் புலிகளின் அபிலாஷைகளைத் தூண்டும் விதத்தில் உரையாற்றியுள்ளார். இதன் மூலம் அவர் புலிகளுடன் உள்ள தொடர்பு வெளிப்படையாகத் தெரிகின்றது.

பொதுநலவாய அமைப்பு இன்று வலுவிழந்த நிலைமையில் இருக்கிறது. அதனால் இதற்கு உயிர்கொடுக்கவே இவர் முயல்கிறார். இலங்கையை இவர் இன்னும் தனது கொலனித்துவ அடிமை நாடாக நினைக்கிறார் போலும். அவ்வாறு அவர் நினைப்பதாக இருந்தால் அது பெரும் தவறு. கொலனித்துவஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற எம்மை அவர் தொடர்ந் தும் அடிமைகளாக வைத்திருப்பதற்கு முயற்சி செய்கிறார் எனவும் தெரிகிறது.

எனவே எமக்குப் பொதுநலவாய அமைப்பின் தொடர்புகள் இனித் தேவையில்லை. அதிலிருந்து விலகுவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.