பொதுத்தேர்தலில் மாவை.சேனாதிராஜா களமிறங்குவது உறுதி!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா களமிறங்கமாட்டார் என்ற செய்தியானது பொய்யானது என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான சி வி கே சிவஞானம் தெரிவித்தார்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தேர்தலில் போட்டியிட மாட்டார் என்ற போலிப் பிரசாரம் சிலரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது அந்த செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை.

அனுபவம்மிக்க நீண்ட அரசியல்வாதியான மாவை சேனாதிராஜா இம்முறை பொதுத் தேர்தலில் களமிறங்குவது உறுதி எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply