இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகே 05 அபாயகரமான இரசாயன பொருட்கள் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுடன் தீ விபத்துக்குள்ளான எம்.வி எக்ஸ்- பிரஸ் பேர்ள் என்ற சரக்குக் கப்பல் கடலில் மூழ்கியுள்ளது. இந்ந நிலைமையானது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக எகோனொமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சீனாவில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழையும் நோக்கில் இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளானது. கப்பலில் இருந்த அபாயகரமான இரசாயன பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த தகவல்கள் மறைத்து எடுத்துச் செல்லப்பட்டதா என்ற சந்தேக நிலை தோற்று வித்தள்ளது. ஏனெனில் மூழ்கும் கப்பலின் அடிப்பகுதியல் காணப்படும் பொருட்கள் மற்றும் எண்ணெய் கசிவுகள் குறித்து ஆராய்வதற்காக ஆழ் கடல் சுழியோடிகளின் குறிப்பிட்டளவு தடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், பாதுகாப்பு தொடர்பான அச்சத்தையும் தோற்றுவித்தள்ளது. இதனை உள்நாட்டு மக்கள் அறிந்திருக்கிறார்கள். கப்பல் வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதி வழியாக கொண்டு செல்ல திட்டமிட்டிருந்த பெருந்தொகை இரசாயனங்கள் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், இலங்கையின் அனுமதியின்றி கதிரியக்க பொருட்களுடன் சீன கப்பலொன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்தது. பின்னர் இலங்கை அரசாங்கம் உடனடியாக வெளியேற்றியது.
இந்த பிராந்தியத்தில் சீனாவின் இவ்வகையான நகர்வுகள் குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட அதிகாரிகள் ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளனர். சீனாவின் ஜுhன் சாங்ஹோங் இன்டர்நேசனல் ஷிப்யார்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கியுள்ள நிலையில் அதன் தரம் குறித்த தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கட்டார், இந்தியா மற்றும் இலங்கை வழியாக சிங்கப்பூர் செல்லும் வழியில் பயணித்திருந்தது. மே 19 திகதி இலங்கைக்கு வருவதற்கு முன்பு நைட்ரிக் அமிலம் கசிந்ததாகவும் அதில் மேலும் சில ஆபத்தான பொருட்கள் காணப்படுவதாகவும் தகவல்அளித்ததாக கூறப்பட்டது. கப்பலில் இருந்த 13 சீன பணியாளர்கள் கொழும்பில் இறங்கியுள்ளனர்.
இதையடுத்து மே25 திகதி கப்பலில் வெடிப்பு ஏற்பட்டது என்றும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் கப்பலில் இருந்த ஐந்து இந்திய பணியாளர்கள் இலங்கை அதிகாரிகள் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துடனும் தொடர்பிலிருந்துள்ளனர். இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை மீட்பு பணிகளுக்கு வந்துள்ளது.
ஜூன் 1ஆம் திகதி தீ பரவல் முழு அளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோதிலும் மறுநாள் கப்பல் மூழ்கியது. இந்த கப்பில் 25 தொன் நைட்ரிக் அமிலம் மற்றும் பிற இரசாயனங்களை பொருட்கள் காணப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் உரிமைகள் அமைப்பான சுற்றுச்சூழல் நீதி மையம் மற்றும் மீனவர்களின் ஆர்வலர்கள் இலங்கை அரசாங்கத்திற்கும் எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலின் நிர்வாகத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் அபாயகரமான இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக்குகளை ஏற்றிச் சென்ற கப்பலில் ஏற்பட்ட தீயினால் இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் அழிவை உள்ளூர் அதிகாரிகள் தடுத்திருக்க வேண்டும். கப்பலின் கேப்டன் மற்றும் குழுவினரை தடுத்து அவர்களுக்கு எதிராக குற்றவியல் மற்றும் சிவில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் மனுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவுகளைத் தடுக்க பொருத்தமான சட்டங்களையும் விதிகளையும்உருவாக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை கடலுக்குள் நுழைவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பே, மே 11 அன்று கப்பலின் குழுவினர் ஒரு அமில கசிவு பற்றி அறிந்துள்ளனர்.
இந்நிலையில் உள்ளூர் அதிகாரிகள் கப்பலை இலங்கைக்குள் அனுமதித்திருக்க கூடாது என்பதே சூழலியலாளர்களின் கருத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.