பேரறிவாளனின் பிணைக் காலம் நீட்டிப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாத கால பிணை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பேரறிவாளனின் ஒரு மாத கால நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், அதனை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து உத்தரவிடுமாறு அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு பிணை உத்தரவை நீடித்துள்ளது.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ராஜிவ் கொலையுடன் தொடர்புடைய நபர்களுக்கு சிறியரக மின்கலன்களை வாங்கிக்கொடுத்தார் என குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டனை வழங்கல்ப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பின்னாளில் விசாரணையாளர்கள் பலர் தமது தவறுகள் காரணமாகவே இவருக்கு இவ்வாறான தண்டனை வழங்கல்ப்பட்டுள்ளது என ஒப்புதல் வாக்குமூலம் அளித்த நிலையிலும் இவர் தொடர்ந்து சிறைவைக்கப்பட்டிருப்பது நீதிக்கு புறம்பானது என்றே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரை கவனித்துக்கொள்ளவும் பேரறிவாளனின் சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் அவருக்கு கடந்த மாதம் 12 ஆம் திகதி ஒரு மாத கால பிணை வழங்கப்பட்டது.

Leave a Reply