பேரணியில் கலந்துகொண்டோரை சிறையில் அடைக்க முடியும் – அமைச்சர் சரத் வீரசேகர

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய முடியும்,அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைக்க முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்

அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஒன்று இடம்பெறும்போது எங்களிற்கு இது குறித்த புலனாய்வு தகவல்கள் கிடைத்துவிடுகின்றன நாங்கள் நீதிமன்ற உத்தரவை பெற்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அவர்களை கைதுசெய்வதை அவர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொள்வதை சுமந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் விரும்புகின்றார்கள்.

இதன் காரணமாக நாங்கள் சகிப்புதன்மையுடன் நடந்துகொண்டோம்,ஆனால் தற்போது நீதிமன்ற உத்தரவு உள்ளதால் எங்களிடம் அவர்களின் படங்கள் உள்ளதால் அவர்களின் வாகனங்களின் படங்கள் உள்ளதால் இந்த தனிநபர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எங்களால் அவர்களிற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய முடியும்,அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் சட்டத்தின் அடிப்படையில் செயற்படுவோம்,இதன் காரணமாக நீங்கள் அச்சப்படதேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் இந்த நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டோம்,அடுத்த சில நாட்களில் நாங்கள் வழக்குகளை தாக்கல் செய்வோம், சுமந்திரனிற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்,நான் நேற்று அவருக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பை விலக்கிக்கொண்டேன்

Leave a Reply