பெண் பணியாளர்கள் தொடர்பில் வவுனியாவில் பேரணி!!

வவுனியா வர்த்தக நிலையங்களில் பணி புரியும் பெண் பணியாளர்களின் உரிமைகளை பாதுக்காக்க கோரிய விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று வவுனியாவில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

கிராமிய பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவி பத்மநாதன் பிரியாவின் தலைமையில் குறித்த பேரணி இடம் பெற்றிருந்தது.

வவுனியா வாடிவீட்டில் ஆரம்பமாகிய ஊர்வலம் கடைவீதி வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தை அடைந்து வவுனியா வர்த்தக சங்க கட்டடம் வரை சென்று நிறைவுற்றது.

இதன் போது குறித்த விடயங்களை உள்ளடக்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிற்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் வர்த்தக சங்கம் மற்றும் வர்த்தக நலன்புரிச் சங்கத்தினருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply