புலிகள் மீதான தடை நீக்க விவகாரம்; அவதானித்து வருவதாக வெளிவிவகர அமைச்சு அறிக்கை

357 Views

பிரிட்டனின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான ஆணைக்குழு வெளியிட்ட தீர்ப்பு தொடர்பில் அறிந்துள்ளதாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் ஒரு தரப்பில்லை. எனவே, இதுதொடர்பில் இலங்கை அரசாங்கம் நேரடியாக தனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, தொடரும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து தகவல்களை வழங்குவதன் மூலம் இலங்கை அரசாங்கம் பிரிட்டனுக்கு உதவுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விடயங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து அவதானித்து வரும். விடுதலைப்புலிகள் அமைப்பில் எஞ்சியிருப்பவர்களும் அந்த அமைப்பின் பயங்கரவாதக் கொள்கையுடன் தொடர்புடையவர்களும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கையில் வன்முறையைத் தூண்டவும் நாட்டை ஸ்திரமிழக்கச் செய்யவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர் என்பதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன என வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply