புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பல அதிரடியாகத் தடை – விசேட வர்த்தமானி வெளியானது

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்கு இலங்கை அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இது குறித்த விஷேட வர்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பிரித்தானிய தமிழர் பேரவை British Tamils Forum (BTF) , கனேடிய தமிழ் காங்கிரஸ் Canadian Tamil Congress  (CTC), அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் Australian Tamil Congress (ATC), உலக தமிழர் பேரவை Global Tamil  forum (GTF), கனேடிய தமிழர் தேசிய அவை National Council of Canadian Tamils (NCCT) , தமிழ் இளையோர் அமைப்பு Tamil Youth Organisation UK (TYO- UK,France,australia,switzerland,Canada), உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு World Tamil Coordinating Committee (WTCC) ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைப்புகள் சார்ந்த தனி நபர்களின் பெயர்களும் இந்த தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.