புத்த சிலைகள் உடைப்பு- பஸ்யாலயில் சம்பவம்

279 Views

கொழும்பு – கண்டி வீதியின் பஸ்யால நகரத்தில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் இருந்த புத்தர் சிலைகள் மூன்று உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (05) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் இருந்த சிசிரிவி உடைக்கப்பட்டுள்ளதுடன் அதன் வயர்களும் அகற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நிட்டம்புவ பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply