புதுக்குடியிருப்பு – இரணைப்பாலையில் குண்டு வெடிப்பு – பெண் ஒருவர் படுகாயம்

புதுக்குடியிருப்பு பகுதியில் குண்டு வெடித்ததில் 66 வயதான இந்திரன் மரியரெத்தினம் எனும் வயோதிப தாயார் காயமடைந்துள்ளார். 

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை 05 ஆம் வட்டாரப் பகுதியில் வீட்டு காணியை இன்று செவ்வாய்கிழமை மாலை துப்பரவு செய்து தீ மூட்டிய போது குண்டு வெடித்துள்ளது.

குறித்த வயோதிபர் தனது காணியில் உள்ள தென்னை ஓலைகளை எடுத்து ஓரிடத்தில் குவித்து, தீ மூட்டியுள்ளார் இதன் போதே குண்டு வெடித்துள்ளது.

காயங்களுக்கு உள்ளான வயோதிபர், புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குண்டு வெடிப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் குண்டு வெடித்த குறித்த பகுதி,  அபாயப் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, அந்த அபாய பகுதியில் வேறு வெடிபொருள்கள் இருப்பது தொடர்பில் ஆய்வு செய்ய நடவடிக்கை ஏடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.