அண்மையில் சிறீலங்காவில் மரணமடைந்த உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்னா ஜெயவர்த்தனா, அணுக்கதிர்வீச்சின் மூலம் கொல்லப்பட்டுள்ளதாக நீதியாளர்கள் வட்டாரங்கள் சந்தேகம் தெரிவித்துள்ளன.
63 வயதான பிரசன்னா திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் மரணத்தை தழுவியுள்ளார்.
அவர் இரத்தப்புற்றுநோய் காரமணமாக இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளபோதும், அவரது திடீர் மரணம் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மற்றும் நீதியாளர்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
நேர்மையாக தீர்ப்புக்களை வழங்குவதில் பிரசன்னா மிகவும் சிறந்த நீதியாளர் என கொழும்பைத் தளமாகக் கொண்ட நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ள ரஸ்யாவின் முன்னாள் படை அதிகாரிகளை குறிவைத்து ரஸ்யா புலனாய்வுத்துறை கதிர்வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டுவருவது போலவே இதனை தாம் பார்ப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.