புதிதாக ஒரு சட்டம் நிறைவேற்றப்படுமாயின் இலங்கை படுபாதாளத்திற்குள் தள்ளப்படும்-சார்ல்ஸ் நிர்மலநாதன்

13ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கி 22ஆவது யாப்பு மாற்றமாக புதிதாக ஒரு சட்டம் நிறைவேற்றப்படுமாயின் இலங்கை படுபாதாளத்திற்குள் தள்ளப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் 13ஆவது சீர்த்திருத்தத்தை நீக்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு வெளியிடுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.