பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவே கொன்றேன் -லண்டன் தமிழ் குடும்பஸ்தர் வாக்குமூலம்

395 Views

நானில்லாத காலத்தில் எனது பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே அவர்களைக் கொலைசெய்தேன்” என லண்டனில் தனது இரு குழந்தைகளை கொலை செய்த தந்தை  தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

லண்டனின் கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட நடராஜா நித்தியகுமார், தனது நாலு வயது மற்றும் 19 மாதக் குழந்தைகளை கத்தியால் வெட்டி படுகொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்றிருந்தார்.

இதையடுத்து அவரது மனைவி அவசர சிகிச்சைப்பிரிவினருக்கு அறிவித்ததையடுத்து படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நடராஜா நித்தியகுமாருக்கு எதிராக தற்போது கொலைக்குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அவருக்கு எதிரான விசாரணையின்போதே மேற்கண்டவாறு கொலைக்கான தனது காரணத்தை கூறியுள்ளார்.

தான் பணிபுரிந்த வேலையில் வாடிக்கையாளர்கள் ஏற்படுத்திய மனஅழுத்தமும் இதற்கு ஒரு காரணம் என்று கூறியுள்ளார். அவரது மனைவி தனது சகோதரியுடன் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியத்தை வழங்கினார்.

குற்றஞ்சாட்டப்பட்ட நடராஜா நித்தியகுமார் சம்பவம் இடம்பெற்ற கணத்தில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் என்னசெய்வதென்றே தெரியாமல் நடந்துகொண்டிருக்கிறார் என்பதும் மருத்துவரின் ஊடாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நடராஜா நித்தியகுமார் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் இதனை தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் திகதியை எதிர்வரும் டிசெம்பர் 10 ஆம் திகதிக்கு நீதி மன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நன்றி- எஸ்.பி.எஸ். தமிழ்

Leave a Reply