பிலிப்பைன்ஸூக்கு திரும்பிய 2 இலட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள்

489 Views
கொரோனா பெருந்தொற்று சூழலினால் வேலைகளை இழந்த பிலிப்பைன்சை சேர்ந்த சுமார் 2 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளிநாடுகளில் பணியாற்றி 9,574 தொழிலாளர்கள் நாடு திரும்பியதன் மூலம் நாடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 195,224 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் பல இலட்சம் மக்கள் தங்கள் தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையை எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply