இலங்கையில், ஒரே நாளில் அதிகூடிய எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. அதன்படி, நேற்று மட்டும் 729 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 831 ஆக உயர்ந்திருக்கின்றது.
திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் பணி புரிந்த பிரென்ட்டிக்ஸ் ஆடைத்தொழில்சாலை ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
இந்தத் தொழில்சாலை ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 831 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் கம்பஹா பொலிஸ் எல்லைப் பகுதிக்குள் மீண்டும் அறிவிக்கும் வரைநேற்று மாலை 6 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.