பிரித்தானிய நீதிமன்றம் முன்னால் அசைந்த புலிக்கொடிகள்; கடும் கண்டனம் வெளியிடும் சிறிலங்கா

லண்டன் சிறிலங்கா தூதரக முன்னாள் பாதுகாப்புத் அதிகாரி பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் போது பிரித்தானிய நீதிமன்றத்தின் முன்னால், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் கொடிகளை தமிழர்கள் ஏந்தியிருந்தமை தொடர்பில் இலங்கை அரசு தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக சிறிலங்கா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

‘நீதிமன்ற விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடிகளை மிகவும் வெளிப்படையாக அசைத்துக் கொண்டிருந்தனர்’ என சிறிலங்கா தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி லண்டனில் உள்ள இலங்கை இலங்கைத்தூதரகத்துக்கு வெளியே இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை நோக்கி தொண்டை அறுக்கும் சைகையை குறித்த இராணுவ அதிகாரி காட்டியமை தொடர்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது

இந்த நடவடிக்கை பிரிட்டனின் பொது ஒழுங்கு சட்டத்தை மீறுவதாக அமைவதால்,இவ்வழக்கில் இராணுவ அதிகாரி குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். அத்துடன் அவருக்கு 4,000 பவுன்ஸ் அபராதமும் விதித்தார்.

Leave a Reply