தியாகதீபம் லெப்.கேணல். திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவு சுமந்தும், கேணல்.சங்கர் அவர்களின் 18ஆவது. நினைவு சுமந்து பிரான்சு புறநகர் பகுதியில் ஒன்றான ஆர்ஜொந்தே நகரில் தியாகதீபம் நினைவுக்கல்லின் முன்பாக காலை 10.00 மணிக்கு நினைவுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.
நினைவுச் சுடரினை தியாக திலீபனுடன் ஒன்றாய் பணியாற்றிய தோழர். மேத்தா அவர்கள் ஏற்றிவைக்க தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மலர் வணக்கம் செலுத்தி அகவணக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து மக்கள் சுடர்வணக்கம்,மலர் வணக்கம் செய்தனர்.
இன்றைய நாள் அடையாள உணவுதவிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர்.