563 Views
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த வாரம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒரு தீர்மானத்தின் சுருக்கமான முன்வரையை அறிமுகம் செய்து இருந்தார். இந்நிலையில், நேற்று (நவ.29) அந்தத் தீர்மானம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, பாஜகவை சேர்ந்த உறுப்பினர் திரிவேதி, விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பற்றி விமர்சித்தபோது, அதற்கு பதிலிறுத்த வைகோ பிரபாகரன் ஈழத் தமிழர்கள் விடுதலைக்காகப் போராடிய மாவீரன் என அந்த அவையில் முழங்கினார்.