பிரபல சர்வதேச ஊடகவியலாளர் பி. மாணிக்கவாசகம் அவர்கள் காலமானார்

340776151 240618651688408 7744978682408961470 n.jpg?stp=dst jpg s600x600& nc cat=108&ccb=1 7& nc sid=8bfeb9& nc ohc=gtaNSLINSlQAX Fm9ov& nc ht=scontent maa2 1 பிரபல சர்வதேச ஊடகவியலாளர் பி. மாணிக்கவாசகம் அவர்கள் காலமானார்
இலங்கையின் பெரும் ஊடக ஆளுமையும் எழுத்தாளரும் இலக்கு ஊடகத்தின் சிறப்பு கட்டுரையாளருமான பி. மாணிக்கவாசகம் அவர்கள் காலமாகிவிட்டார்.
BBC Tamil  மாணிக்கவாசகர் அவர்கள்  எல்லோராலும் அறியப்பட்ட ஊடகப் பொக்கிசம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் கால நெருக்கடியான சூழ் நிலைகளிலும்  சமாதான காலப்பகுதிகளிலும்  சர்வதேசத்திற்கு தமிழர்களின் உரிமை பிரச்சனைகள் தொடர்பில் தொடர்ந்து எடுத்துரைத்து வந்திருந்தார்.
அவரின் இறுதிக்கிரியைகள் 13.04.2023 நாளை வியாழக்கிழமை 10 ம் ஒழுங்கை வைரவபுளியங்குளத்திலுள்ள அவரின் இல்லத்தில் காலை 9 மணிக்கு இடம்பெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் தட்சநாதன்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என அவரின் குடும்பத்தினர் அறிய தந்துள்ளனர்.
இந்நேரத்தில்  இலக்கு ஊடகம் மதிப்புக்குறிய பி. மாணிக்கவாசகம் அவர்களுக்கு தனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. அத்தோடு அவரின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.